விக்னேஷ் சிவன் - அஜித் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டுவிட்டார். இதனால் விக்னேஷ் சிவனுக்கும் நடிகர் அஜித்துக்கும் இடையே பிரச்சனை என்பது போல் செய்திகள் பரவியது. அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவனை படத்திலிருந்து வெளியேற்றியதால், இனிமேல் அஜித்துடன் எந்த ஒரு படத்திலும் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி இந்நிலையில், இந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் அழகாக சிரித்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். படத்திலிருந்து வெளியேறிய பிறகும் அஜித் குமாரின் உண்மையான ரசிகராக விக்னேஷ் சிவன் நடந்துகொள்கிறார் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. Link: Click Here