ஏர் டெக்கான் நிறுவனர் நிறுவிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான இதில், சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவே இல்லை... வாழ்த்திருக்கிறார். கண்டிப்பாக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் உலவி வருகிறது. குறிப்பாக பிளைட் டிக்கெட்டிற்கு பணமின்றி விமான நிலையில் பயணிகளிடம் பணம் கேட்கும் போது கண் கலங்க வைக்கிறார்.
அப்படித்தான் படத்தின் இறுதிக்காட்சியில் பெண் பைலட் ஒருவர் விமானத்தை இயக்கியது போல் காட்டப்பட்டிருக்கும், அந்த பெண் பைலட்டை பார்த்து ஊர்வசி சூர்யாவிடம் “எப்பா... இந்த பிள்ளையா இந்த பிளைட்டை ஓட்டுச்சு” என கேட்பார்.
மேலும் செய்திகள்: சூர்யாவின் 'சூரரை போற்று' ஓடிடி தளத்தில் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது?
அந்த காட்சியில் பெண் பைலட்டாக தோன்றியவர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தீவிரமாக தேடி வந்தனர். அவருடைய பெயர் வர்ஷா நாயர். திரையில் கெத்தாக பைலட் உடையில் நடந்து சென்ற வர்ஷா நிஜத்திலும் ஒரு பெண் பைலட்டாக இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வருகிறார்.