வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சூர்யாவின் ரசிகர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியில் நடித்து வருகிறார் சூர்யா.
இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘சூர்யா 40’ ஆகிய படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் ‘டாக்டர்’ பட ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் பெயரும் ஹீரோயின் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
‘சூர்யா 40’ படத்தின் நடிகர்கள் குறித்த தகவல்கள் தீயாக பரவி வந்த நிலையில் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “நண்பர்களே‘சூர்யா 40’ திரைப்படம் குறித்த உங்களது ஆர்வம் எங்களுக்கு புரிகிறது. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள். தயாரிப்பு நிறுவனம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும். உங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க, நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்” என்று பாண்டிராஜ் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக