முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லுங்கியோட வந்தா டிக்கெட் தர மாட்டோம்.... அடாவடி செய்த தியேட்டர்காரர்கள் - பதிலுக்கு ரசிகர் செய்த தரமானசம்பவம்


லுங்கி அணிந்து வந்த காரணத்தினால் படம் பார்க்க டிக்கெட் தர மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்குமல்டிபிளக்ஸ் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

 

வங்கதேசத்தில் ஸ்டார் சினி பிளெக்ஸ் எனும் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்குமுன் இந்த தியேட்டருக்கு முன் சமன் அலி சர்கார் என்பவர் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது டிக்கெட் எடுக்கசென்றபோது அவருக்கு தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் தர மறுத்துள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு லுங்கி அணிந்துவந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.


இதனால் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார் முன் சமன் அலி சர்கார். லுங்கி அணிந்திருந்ததைகாரணம் காட்டி அவருக்கு டிக்கெட் தர மறுத்ததை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில்பதிவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆனதோடு சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகத்திற்கும் எதிர்ப்பு வலுத்தது.


இதையடுத்து ஸ்டார் சினி பிளெக்ஸ் நிறுவனம் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது. இந்தசம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அந்நிறுவனம்வெளியிட்டிருந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


இதையடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் விதமாக ஸ்டார் முன் சமன் அலி சர்காரின் குடும்பத்தினருக்கு இலவசமாகடிக்கெட் வழங்கிய ஸ்டார் சினி பிளெக்ஸ் நிறுவனம், அவர்களை பூரன் படத்தின் நாயகனுடன் சேர்ந்து படம் பார்க்கவும்ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்விலும் முன் சமன் அலி சர்கார் லுங்கி அணிந்து தான் வந்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 


கருத்துகள்

  1. As a outcome, slot recreation developers can leverage these technologies to 온라인카지노 create immersive and practical casinos. However, because the jackpot rises in worth, the chances of winning are lower. So, this recreation is riskier and suited to gamers with an all-in-or-nothing mentality.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக