அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு விவரம் இதோ


ஆர்யா, சாயிஷா : 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் ஆர்யா. இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவுக்கு 38 வயதில் திருமணம் ஆனது. அப்போது சாயிஷாவுக்கு 21 வயது. கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.



சினேகன், கன்னிகா : 

தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் ஆசிரியராக பணியாற்றியவர் சினேகன். இவர் நடிகை கன்னிகா ரவியை 8 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 43 வயதான கவிஞர் சினேகன், 27வயதான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் 16 வயது வித்தியாசம் உள்ளது.


அஜித் – ஷாலினி :

தல அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் எட்டு வருடம் வயது வித்தியாசம்.


ஜெனிலியா , ரித்தேஷ் :

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் மலையாள நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய 29வது வயதில் ஜெனிலியா திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவருடைய கணவருக்கும் 9 வருடம் வயது வித்தியாசம்.


அசின் , ஷர்மா :

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இவர் தன்னுடைய முப்பதாவது வயதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சர்மாவிற்கு அப்போது 40 வயது. இருவருக்கும் பத்து வருடம் வயது வித்யாசம்.