பிக்பாஸ்- 6 முதல்வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. வெளியேறும் சிடு மூஞ்சி போட்டியாளர். Cinemugam.

Cinemugam: 

விஜய் டிவியின் டாப் ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஆரம்பித்து ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவர் GP முத்து தான். முத்துவால் இந்த சீசன் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். வழக்கம் போல வார இறுதி நாட்களை கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த எபிசோடுகளும் ரசிக்கும் விதமாக அமைந்தது.

இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று இந்த சீஸனுக்கான முதல் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர்களின் பெயர்களையும், நாமினேஷனுக்கான காரணத்தையும் கூறினர்.

அதன்படி அதிகமான போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட பெயர்கள் ஆயிஷா மற்றும் தனலட்சுமி. எனவே இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேறுவது உறுதியாகிறது. முதல் முறையே எதிர்பாராத விதமாக டபுள் எலிமினேஷன் என்றால் இருவருமே வெளியேறி விடுவார்கள்.

ஆயிஷா விஜய் டிவியின் சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், ஜீ தமிழில் இவர் நடித்த சத்யா சீரியல் மூலம் பிரபலமடைந்தார். இவருக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், பிக்பாஸில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறாரா என்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

தனலட்சுமி இன்ஸ்ட்டா ரீலிஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். என்ட்ரியின் போதே கமலிடம் பாராட்டுகளை பெற்ற தனலட்சுமி, ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சச்சரவுகளுடனே இருந்து வருகிறார். இவரால் இந்த வீட்டில் அனுசரித்து இருக்க முடியவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. இதனால் பார்ப்பவர்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார்.