அந்த சம்பவம் என்னை நடுங்க வைக்கிறது - டிரைவர் மீது நடிகை பகீர் புகார்!

பிரபல நடிகை, டிரைவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மாணவ் நாயக்

இந்தி, மராத்திய மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் மாணவ் நாயக். இவர் பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் முகநூல் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ''நான் மும்பையில் இரவு வீட்டுக்கு வாடகை காரில் சென்றேன். டிரைவர் நான் சொல்லியும் கேட்காமல் போன் பேசிக்கொண்டே ஓட்டினார். ஒரு இடத்தில் சிக்னலை மீறியதால் போலீசார் காரை புகைப்படம் எடுத்தனர்.

டிரைவர் அத்துமீறல்

அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். நான் தலையிட்டு போட்டோ எடுத்துவிட்டார்கள் இனி பேசி பயன் இல்லை என்றேன். அங்கிருந்து புறப்பட்டதும் போலீசார் விதித்த ரூ.500 அபராத தொகையை நீங்கள் கொடுப்பீர்களா என்று என்மீது கோபமாக கத்தினார். 

பணத்தை தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று என்னை மிரட்டினார். இதனால் போலீஸ் நிலையத்துக்கு போக சொன்னேன். அவர் வேறு வழியாக காரை வேகமாக ஓட்டிச்சென்றார்.

போலீஸில் புகார்

யாருடனோ போனில் பேசினார். இதனால் பயந்துபோய் காரை நிறுத்த சொல்லி சத்தம் போட்டேன். அவர் நிறுத்தவில்லை. என் சத்தத்தை கேட்டு இரண்டு மோட்டார் பைக்கும், ஒரு ஆட்டோ ரிக் ஷாவும் காரை மறித்து என்னை காப்பாற்றினார்கள்.

அந்த அனுபவம் என்னை நடுங்க வைக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், மும்பை போலீஸ் கமிஷனர் விசுவாஸ் நாகரே பாடில் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.