பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை

நடிகை ஆர்யா பானர்ஜி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33.

நடிகை ஆர்யா பானர்ஜி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33.


மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ திரைப்படத்தில் வித்யாபாலன் உடன் இணைந்து நடித்திருந்தவர் ஆர்யா பானர்ஜி. இத்திரைப்படம் மட்டுமல்லாது லவ் செக்ஸ் அவுர் தோஹா உள்ளிட்ட ஒரு சில இந்திப்படங்களில் நடித்திருக்கும் ஆர்யா பானர்ஜி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.


மறைந்த சிதார் கலைஞர் நிகில் பந்தோபாத்யாயாவின் மகளான ஆர்யா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் படுக்கையறையில் நேற்று ஆர்யா பானர்ஜி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடிகை ஆர்யா பானர்ஜி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33.

ஆர்யா பானர்ஜி வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் நேற்று வழக்கம்போல வேலைக்கு வந்துள்ளார். அப்போது காலிங் பெல் அடித்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அந்தப் பெண் அக்கம் பக்கத்தில் இருப்போரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனது படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார் ஆர்யா பானர்ஜி.


ஆர்யா பானர்ஜியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல்துறையைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை திரட்டி சோதனை செய்து வருகின்றனர்.


அப்பார்ட்மெண்டில் ஆர்யா பானர்ஜி மட்டும் தனியாக வசித்து வந்ததாக வீட்டு பணிப்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பெங்காலி நடிகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.