நெட்ஃபிளிக்ஸுக்காக நயன்தாராவை ரீப்ளேஸ் செய்த முன்னாள் உலக அழகி!

நெட்ஃபிளிக்ஸுக்காகத் தயாராகும் வெப் சீரிஸ் ஒன்றில் நயன்தாராவுக்குப் பதிலாக நடிக்க முன்னாள் உலக அழகியான ஊர்வசி ரிதுலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

நயன்தாராவை ரீப்ளேஸ் செய்த முன்னாள் உலக அழகி!

பாலிவுட் ஹீரோ ரன்தீப் ஹூடா நடிப்பில் நீரஜ் பதக் இயக்கத்தில் உண்மைக் கதையைத் தழுவி `இன்ஸ்பெக்டர் அவினாஷ்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று தயாராகிறது. இந்த வெப் சீரியஸில் இன்ஸ்பெக்டர் அவினாஷாக ரன்தீப் நடிக்க அவரது மனைவி பூனம் மிஸ்ரா கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 

நயன்தாராவை ரீப்ளேஸ் செய்த முன்னாள் உலக அழகி!

இப்போது அந்த ரோலில் ஊர்வசி ரிதுலா இருக்கிறார். இதற்காக ரியல் லைஃப் பூனம் மிஸ்ராவை நேரில் சந்தித்து சில டிப்ஸ்களையும் ஊர்வசி கேட்டுப் பெற்றிருக்கிறார்.


நயன்தாராவை ரீப்ளேஸ் செய்த முன்னாள் உலக அழகி!


இதுகுறித்து பேசிய ஊர்வசி, `கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக பூனம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். பயோபிக்கில் ஒருவரைப் போல் வாழ்ந்து காட்டுவது நடிகர்களுக்கு மிகப்பெரும் சவால். இது எங்குமே இல்லாத ஒரு கேரக்டரை உருவாக்குவதை விட கடினமானது. நிஜ வாழ்வில் பூனம் மிஸ்ராவைச் சந்தித்த பிறகு, 


நயன்தாராவை ரீப்ளேஸ் செய்த முன்னாள் உலக அழகி!


இன்ஸ்பெக்டர் அவினாஷின் மொத்த தைரியத்தின் மறு உருவமாக அவரைப் பார்த்தேன்’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.