நான் போட்டோ ஷூட் நடத்தினா உங்களுக்கு ஏன் பின்னால் எரியுது? எதிர்மறை விமர்சனங்களுக்கு பாரதிகண்ணம்மா பரீனா கொடுத்த பதிலடி.!!

நான் போட்டோ ஷூட் நடத்தினா உங்களுக்கு ஏன் பின்னால் எரியுது? எதிர்மறை விமர்சனங்களுக்கு பாரதிகண்ணம்மா ஃபரினா கொடுத்த பதிலடி.!!

September 7, 2021
பாரதிகண்ணம்மா பரீனா கொடுத்த பதிலடி.!!


Bharathi Kannamma Farina Reply to Haters : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.


இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை ஃபரினா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.


பாரதிகண்ணம்மா பரீனா கொடுத்த பதிலடி.!!


இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் பரீனா பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறார்.


அப்படி சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.


பாரதிகண்ணம்மா பரீனா கொடுத்த பதிலடி.!!

அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகட்டிவ் கமன்ட்ஸ் குறித்து பதிவிட்ட ஃபரினா, பிரக்னன்சி டைம்ல எத்தனை போட்டோஷூட் ஏதோ நீ தான் இந்த உலகத்திலேயே பிரெக்னேன்ட் மாதிரி என்று கேள்வி கேட்கிறார்கள் அதற்கு என்னுடைய பதில் மாடலிங் என்னுடைய வேலை நான் ஒல்லியாக இருந்தால் என்ன குண்டாக இருந்தால் என்ன பிரெக்னேன்ட்டாக இருந்தால் என்ன நான் வேலை செய்வேன். உங்களுக்கு எல்லாம் பின்னால் எங்கே எரியுது என்று எனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.