நெற்றிக்கண் படத்தின் டீசர் இன்று(நவ., 18) நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. கண்பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளார். டீசர் முழுவதையும் பார்க்கும் போது அவர் ஒரு ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார் என்றே தோன்றுகிறது.
மேக்கப் இல்லாமலா அல்லது குறைவான மேக்கப்பா எனத் தெரியவில்லை, வித்தியாசமான தோற்றத்தில் நயன்தாராவைப் பார்க்க முடிகிறது. வழக்கம் போல அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த டீசரே காட்டிவிடுகிறது.
சிலரைக் கடத்தி கொடுமை செய்யும் ஒருவன் நயன்தாராவின் வலையில் சிக்கி என்ன ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை என டீசரைப் பார்க்கும் போது புரிகிறது. இதை ஆட்டுக்குட்டிகள், நரி என நயன்தாராவே கதை சொல்லும் விதத்தில் டீசர் அமைந்துள்ளது.