விவாகரத்தான பெண்ணுடன் அஜித் பட நடிகருக்கு நடந்த நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படம்.!!

விவாகரத்தான பெண்ணுடன் அஜித் பட நடிகருக்கு நடந்த நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படம்.!!

September 8, 2021


விவாகரத்தான பெண் பிரபலத்துடன் அஜித் பட நடிகருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

வித்யூத் ஜம்வால்,Vidyut Jammwal,

Vidyut Jammwal With Lover : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பில்லா. அதன் பின்னர் பில்லா-2 என இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இதில் வில்லனாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால். அதன் பின்னர் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தார்.


மேலும் அஞ்சான் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் பிரபல நடிகை மோனா சிங் உடன் காதலில் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர்.வித்யூத் ஜம்வால்,Vidyut Jammwal,

இந்த நிலையில் இவருக்கு ஆடை வடிவமைப்பாளர் நந்திதாவுடன் காதல் மலர்ந்தது. தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் தாஜ்மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.


நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.