நயன்தாரா படத்தை தோனி தயாரிக்கிறாரா? வந்த அதிகாரப்பூர்வ விளக்கம்


Nayanthara & Dhoni

நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்க இருக்கிறார் என்று சமீபத்தில் தகவல் பரவியது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் நிலையில் இப்படி ஒரு செய்தி பரவியது ரசிகர்களுக்கு குஷி ஏற்படுத்தியது.

ரஜினி உடன் தொடர்புடைய சஞ்சய் என்ற நபர் தான் இந்த படத்தை இயக்குகிறார் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது இது பற்றி தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் விளக்கம் கொடுத்து இருக்கிறது.

"சஞ்சய் என்ற நபர் எவருடனும் நங்கள் தற்போது பணியாற்றவில்லை. இப்படி பட்ட வதந்திகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்" என தெரிவித்து இருக்கின்றனர்.

#Nayanthara

#MSDhoni

#TamilCinemaNews