சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போன 5 வாரிசு நடிகர்கள்.


சினிமாவை பொறுத்த வரை வாரிசு நடிகர்கள் சுலபமாக நுழைந்து விடலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே அதில் ஜொலிக்க முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக தளபதி விஜய் கூட சொல்லலாம். அவரது தந்தை இயக்குனராக இருப்பதால் கதாநாயகனாக விஜய் அறிமுகமானாலும் தன்னுடைய கடின உழைப்பால் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் வாரிசு நடிகர்களாக வந்து ஏமாற்றத்தை தந்த 5 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

கௌதம் கார்த்திக் : நவரச நாயகன் கார்த்திக் பல ரொமான்டிக் படங்களை கொடுத்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர். கார்த்திக்கின் வாரிசாக சினிமாவில் நுழைந்த கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவருடைய படங்கள் தொடர் தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

சாந்தனு : பாக்யராஜ் இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். அதேபோல் இவரது மகன் சாந்தனுவும் நல்ல திறமையான நடிகர் தான். அதுமட்டுமின்றி நாங்கள் டான்ஸ் ஆட கூடியவர். ஆனால் சாந்தனுர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை.

மனோஜ் : கிராமத்து கதைகள் நேர்த்தியாக எடுக்க கூடியவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் தமிழ் சினிமாவிற்கு பல நடிகர், நடிகைகளை கொடுத்துள்ளார். பாரதிராஜாவின் சிஷ்யன் தான் பாக்யராஜ். இவர்களுடைய வாரிசுகள் சினிமாவில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அதாவது பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஒரு ஹீரோவாக அங்கீகாரம் கிடைக்காமல் சினிமாவில் தோற்றுப் போய் உள்ளார்.

சக்தி : இயக்குனர் பி வாசுவின் மகன் தான் நடிகர் சக்தி. பி வாசு சந்திரமுகி போன்று பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் சக்தி சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதனால் அவரால் ஹீரோவாக நிலைத்து நிற்க முடியாமல் போனது.

சிபிராஜ் : ஹீரோ, காமெடி, வில்லன், என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக செய்யக்கூடியவர் நடிகர் சத்யராஜ். இவரது வாரிசு தான் நடிகர் சிபிராஜ். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு எது வருமோ அது போன்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.