ஓபன் நாமினேஷனில் தேர்வான 7 பேர், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

ஓபன் நாமினேஷனில் தேர்வான 7 பேர், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒவ்வொரு வாரமும் எலிமினேட் செய்யப்பட்ட நபர்கள் குறைந்த உடன் பிக் பாஸ் வீடு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதில் விக்ரமன், அசீம், சிவின் ஆகிய மூவரும் பைனல் லிஸ்ட் ஆக தேர்வாங்குவார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது. எல்லோரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி சக போட்டியாளர்களை நாமினேட் செய்தார்கள். அந்த வகையில் இந்த வாரம் 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் தேர்வாகியுள்ளனர்.

எப்போதுமே முதல் ஆளாக காப்பாற்றப்படும் அசீம் நாமினேட் ஆகியுள்ளார். இவரைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் தனலட்சுமி தேர்வாகியுள்ளார். கதிரவன், மணிகண்டன், அமுதவாணன் ஆகியோரும் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் எந்த போட்டியிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் ராம் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோரும் நாமினேட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நிவாஷினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

ஆகையால் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் டிஆர்பிக்காக ராபர்ட் மாஸ்டரை வைத்துக்கொண்டு ராமை வெளியேற்றுவார்கள் என கணிக்கப்படுகிறது. ஏனென்றால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான்.

மேலும் பிக் பாஸ் ரசிகர்களின் வெறுப்பை தனலட்சுமி மற்றும் அமுதவாணன் சம்பாதித்துள்ளனர். இவர்களை வெளியேற்றினால் பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் குறைந்துவிடும். ஆகையால் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ராம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.