பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் முதல்முறையாக ‘நாமினேஷன் கார்டு’ அறிமுகம்!

tamil-bigg-boss-nomination-card-introduced-first-time

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் முதல்முறையாக ‘நாமினேஷன் கார்டு’ அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் புரமோ வீடியோவில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட நபர்கள் ரமேஷ், நிஷா, அனிதா, பாலாஜி, ஆரி, சனம் மற்றும் சோம் 7 பேர் உள்ளனர்.

tamil-bigg-boss-nomination-card-introduced-first-time

இந்த நாமினேஷன் கார்டு பெறும் நபர் “நாமினேட் ஆகாத நபர்களில் இருந்து ஒருவரை நாமினேட் செய்யும் சக்தியை பெறுவார்” என அறிவிக்கப்படுகிறது. அப்போது நிஷா, ஆஜித்தை நாமினேட் செய்கிறார், பாலாஜி அதிரடியாக அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். மேலும் ஆரி, அனிதாவிடம் இந்த கார்டை சனத்துக்கு விட்டு கொடுக்க தயாராக இருக்கிறாயா? என கேட்க அதற்கு அனிதா வாய்ப்பில்லை என கூறுகிறார். மேலும் நிஷாவும், நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என கூறிய நிலையில், ரமேஷ் அங்கிருந்து கோபமாக வெளியேறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

tamil-bigg-boss-nomination-card-introduced-first-time


இந்தக் காட்சிகளை வெளியிலிருந்து நாமினேட் ஆகாத நபர்களான ரியோ, அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா, ஆஜித், கேப்ரில்லா மற்றும் ஷிவானி ஆகியோர் ஆர்வத்துடன் வீட்டிற்குள் இருக்கும் டிவியில் பார்க்கின்றனர். மேலும் பாலாஜி தன்னை நாமினேட் செய்வார் என எதிர்பார்க்காத அர்ச்சனா அதிர்ச்சியடையும் கட்சிகளும் ப்ரோமோ வீடியோவில் உள்ளது. மற்ற போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்வார்கள், நாமினேஷன் கார்டை பெற போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது