தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை சனா கான். அதன் பின்னர் தமிழில் பயணம், ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இவர் திடீரென சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். படைத்தவனின் ஆணைக்கு இணங்க மனிதனின் பாவட்ட வாழ்க்கையை தவிர்த்து, மனித இனத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளேன் என கூறினார்.
இன்று முதல் திரைத்துறை வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக விடை பெறுகிறேன் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் திடீரென சனாகான் திருமணம் செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை சனாகான் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக