சர்தார் திரைவிமர்சனம்

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார். கார்த்தியின் தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. கார்த்தியின் திரைப்பயணத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள சர்தார் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இந்த திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

 கதைக்களம்

சென்னை மாநகரத்தின் போலீஸ் அதிகாரியான கார்த்தி (விஜயகுமார்), மிகவும் பிரபலமான போலிஸ் அதிகாரியாகவும் தான் கையில் எடுக்கும் வழக்குகளை ட்ரெண்டாகும் படியான செயல்களை செய்கிறார். அப்படிப்பட்ட கார்த்தி தனக்கு சிறுவயதில் இருந்தே நன்றாக தெரிந்த வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் ராஷி கண்ணாவை பின் தொடர்ந்து காதலித்து வருகிறார்.

மறுபுறம் குடிநீர் பிலாஸ்டிக் பாட்டில்கள் மூலம் விற்கப்படும் பல்வேறு அவலங்கள் எதிர்த்து போராடி வருகிறார் நடிகை லைலா. பின்னர் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு பைல் திருடபடுகிறது, இதை திருடியது லைலா தான் என்பது கண்டு பிடித்து பின் தொடர்கிறார் கார்த்தி, லைலாவின் மகனான ரித்விக்கும் கார்த்தியுடன் தனது அம்மாவை தேட அவர் இறந்து போனது தெரிய வருகிறது.

லைலா தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு பிடிக்கும் கார்த்தி, இதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களை வைத்து ஆராய தொடங்குகிறார். இதன்மூலம் குடிநீர் வியாபாரம் ஆக்கப்படுவது மற்றும் இந்தியா முழுக்க ஒருவழி குடிநீரை அமைத்து அதை மக்கள் விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படவுள்ள விஷயங்கள் லைலா சேகரித்து வைத்திருந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது.

இது அனைத்திற்கும் பின்னால் வாட்டர் மாஃபியா இயங்கி வருவதும், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சர்தார் என்ற உளவாளியை வெளியே கூட்டிவர லைலா முயற்சி இருப்பதும் கார்த்திக்கு தெரிய வருகிறது. இதன்பின் சர்தார் யார்? சிறையில் இருக்கும் சர்தார் இந்தியாவிற்கு வந்து எப்படி இந்த வாட்டர் மாஃபியா-க்கு எதிராக தனது மகனுடன் தடுத்து நிறுத்துகிறார் என்பதே மீதி கதை,.

படத்தை பற்றிய அலசல்

அப்பா (சர்தார், போஸ்), மகன் (விஜயகுமார்) கதாபாத்திரத்தில் பின்னி எடுத்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இளம் போலிஸ் அதிகாரியாகவும், வயதான சர்தார் கதாபாத்திரத்திலும் அசதியிருக்கிறார் கார்த்தி. சர்தார் கதாபாத்திரத்தில் விதவிதமான தோற்றத்திலும் கார்த்தி புதிய மைல்கலை தொட்டுள்ளார் என்றே கூறலாம். ராஷி கண்ணா அவரின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார். ரஜிஷா விஜயன், ரித்விக் உள்ளிட்டோர் சூப்பர். லைலாவுக்கு நீளமான கதாபாத்திரத்திம் இல்லை, வில்லன் ராவுத்தர் ஒகே.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பின்னணி இசை படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை, முதல்பாதியில் திணிக்கப்பட்டு உள்ளன. கேமராமேன் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் கேமரா வோர்க் சூப்பர். திரைப்படத்தின் மற்ற தொழில்நுட்ப அமசமங்கள் அனைத்து சிறப்பாக இருந்தன.

இயக்குநர் P.S.மித்ரன் மீண்டும் தனது படத்தின் மூலம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திருக்கிறார். பிளாஸ்டிக் குடிநீரை வைத்து அவர் கூறியுள்ள தகவல்கள் அனைத்தும் மக்களிடையே நிச்சயம் ஒரு விழிபுணர்வை கொண்டு வரும். எந்தஒரு தொய்வும் இல்லாமல் திரைக்கதையில் இயக்குநர் மிரட்டியிருக்கிறார். சர்தாரின் பிளாஷ் பேக் காட்சிகள் இரண்டாம் பாதியில் வலுவை சேர்த்துள்ளன. ஸ்பை தில்லர் குறித்த கதை என்பதால் இயக்குநர் இதற்காக செய்துள்ள வேலைகள் பாராட்டுக்குறியது.

படத்தின் தொடக்கத்தில் 10 -15 நிமிடங்கள் செட்டாக டைம் எடுக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் கொஞ்சம் கணிக்ககுடிய வகையில் இருக்கின்றன. வயதான தோற்றத்திலும் மற்ற கெட்டப்-களிலும் கார்த்தியின் மேக்-அப் கனகச்சிதமாக செட்டாகி இருக்கின்றன.

பிளஸ் பாயிண்ட்

கார்த்தியின் நடிப்பு

சர்தார் வரும் காட்சிகள்

படத்தின் திரைக்கதை

எடுத்து கொண்ட தலைப்பு

சர்தார் பிளாஷ் பேக்

மைனஸ் பாயிண்ட்

படத்தின் முதல் 10 நிமிடம்

திணிக்கப்பட்ட பாடல்கள்


மொத்தத்தில் அச்சமூட்டும் பிளாஸ்டிக் குடிநீர் குறித்த விழிபுணர்வை கார்த்தியின் அசத்தலான இரட்டை கதாபாத்திர பொழுதுபோக்குடன் காட்டியுள்ளதால், இந்த தீபாவளி சர்தார் தீபாவளி தான். 

Sardar the Movie Review.